search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா ஓபன் போட்டியிலிருந்து காயம் காரணமாக வெளியேறினார் ஸ்ரீகாந்த்
    X

    சீனா ஓபன் போட்டியிலிருந்து காயம் காரணமாக வெளியேறினார் ஸ்ரீகாந்த்

    இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சீனா ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அக்டோபர் 18 முதல் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருகிறார். அடுத்தடுத்து டென்மார்க் மற்றும் பிரஞ்ச் ஓபன் பட்டங்களை கைப்பற்றினார். இதன் மூலம் 73403 புள்ளிகள் பெற்று உலகத்தர வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த மாதம் நடைபெறும் சீன ஓபனில் வெற்றி பெறுவதன் மூலம் தரவரிசையில் முதல் இடத்தை பிடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.



    இந்நிலையில், கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடைப்பெற்ற தேசிய போட்டியில் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார். இறுதி சுற்றில் பிரனாயிடம் தோல்வியடைந்தார். இப்போட்டியின் போது ஸ்ரீகாந்திற்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சீன ஓபனில் கலந்து கொள்ளமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டது.



    இதற்கு காரணம் இந்திய பேட்மிண்டன் சங்கம் என அதிகாரிகள் கூறினர். வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன் 4-ல் இருந்து 6 வாரம் வரை கண்டிப்பாக பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால் தேசிய பேட்மிண்டன் போட்டியை தற்சமயம் நடத்தியது வீரர்களை பாதித்துள்ளது. ஸ்ரீகாந்த் காலில் காயம் ஏற்பட்டதால் அவரில் உலக தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் கனவு தகர்ந்தது.

    ஒரு வார ஓய்விற்கு பிறகு அவர் மீண்டும் ஹாங்காங் போட்டியில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அவரது ஆசை நிறைவேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    சாய்னா நேவால் மற்றும் பிரனாய் போன்ற வீரர்கள் சீனா மற்றும் ஹாங்காங் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் சூப்பர் சீரிஸ் பைனலுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், போதிய பயிற்சியின்றி விளையாடுவதால் முன்னணி வீரர்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.

    Next Story
    ×