search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பர்-1 முக்கியமல்ல: இன்னும் ஏராளமான இலக்குகளை அடைய வேண்டியுள்ளது; பி.வி. சிந்து
    X

    நம்பர்-1 முக்கியமல்ல: இன்னும் ஏராளமான இலக்குகளை அடைய வேண்டியுள்ளது; பி.வி. சிந்து

    ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, நம்பர்-1 என்பது முக்கியமல்ல என்று கூறியுள்ளார்.
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

    தற்போது பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் பிவி சிந்து 2-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தார். அப்போது நம்பர்-1 என்பது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பி.வி. சிந்து கூறுகையில் ‘‘ஒவ்வொரு விளையாட்டு வீராங்கனைகளும் நம்பர்-1 இடத்தை பிடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தற்போது நான் நம்பர் 2 இடத்தில் இருக்கிறேன். நானும் நம்பர்-1 இடத்தை பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.



    ஆனால், நான் நன்றாக பயிற்சி எடுக்கும்போது அல்லலு விளையாடும்போது தர வரிசை பெரிய விஷயம் அல்ல. பெரிய தொடர்களில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடினால், தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு தானாகவே வரலாம். நான் தரவரிசை மீது கவனம் செலுத்தவில்லை.

    தொடரில் வெற்றி பெற்று நம்பர் 1 இடத்திற்கு முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய நினைப்பு. போட்டிகளில் மீது கவனம் செலுத்து அதில் வெற்றி பெற வேண்டும் என்பது எனக்கு தேவை’’ என்றார்.
    Next Story
    ×