search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச போட்டியை நடத்தும் இந்தியாவின் 50-வது மைதானம் திருவனந்தபுரம் க்ரீன்பீல்டு
    X

    சர்வதேச போட்டியை நடத்தும் இந்தியாவின் 50-வது மைதானம் திருவனந்தபுரம் க்ரீன்பீல்டு

    இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது போட்டியின் மூலம் சர்வதேச போட்டியை நடத்தும் 50-வது இந்திய மைதானம் என்ற பெயரை எடுக்க இருக்கிறது க்ரீன்பீல்டு.
    இந்தியாவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். பறந்து விரிந்துள்ள இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஏராளமான மைதானங்கள் உள்ளது. டெல்லி, கொல்கத்தா, மொகாலி, மும்பை, கான்பூர், பெங்களூர், சென்னை போன்ற மைதானம் முக்கியமானவையாகும்.

    மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் உள்ள 49-வது மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.



    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

    இதற்கு முன் இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றது கிடையாது. இன்றைய போட்டியின்மூலம் சர்வதேச போட்டியை நடத்தும் இந்தியாவின் 50-வது மைதானம் என்ற பெருமையை க்ரீன்பீல்டு பெற இருக்கிறது.
    Next Story
    ×