search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய டி20 அணிக்கு ஐந்தாவது பந்து வீச்சாளர் தேவை: புவனேஸ்வர் குமார்
    X

    இந்திய டி20 அணிக்கு ஐந்தாவது பந்து வீச்சாளர் தேவை: புவனேஸ்வர் குமார்

    இந்திய டி20 கிரிக்கெட் அணி ஐந்தாவது பந்து வீச்சாளரை தவற விடக்கூடாது என்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வலியுறுத்தியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. தொடரை தீர்மானிக்கும் 3-வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 2-வது போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை.

    இதனால் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாட வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

    இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘இந்திய அணி தோல்வியடைந்ததற்காக பந்து வீச்சார்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். எதிரணி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் சிறப்பாக செயல்பட்டோம். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் மிகவும் சிறியது. முதல் போட்டியில் தோல்வியடைந்தால், அதன்பின் 1-1 என சமநிலைப் பெற்று, தொடரை தீர்மானிக்கும் போட்டியில் விளையாட முடியும்.



    ஹர்திக் பாண்டியா மற்றும் வேறு சில வீரர்களை பகுதி நேர பந்து வீச்சாளராக நாம் கருதும் நிலையில் ஐந்தாவது பந்து வீச்சாளர் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். இதுவரை நாம் ஐந்தாவது பந்து வீச்சாளரை மிஸ் செய்யவில்லை. முக்கியமான பந்து வீச்சாளர் விக்கெட் எடுக்காமல், அதிக ரன்கள் விட்டுக்கொடுத்துவிட்டார் என்பதற்காக அவரை நீக்கிவிட்டால், அணியின் காம்பினேசன் குறித்து அதிக அளவில் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×