search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் பயிற்சி ஆட்டம்: ஆண்டர்சன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்
    X

    ஆஷஸ் பயிற்சி ஆட்டம்: ஆண்டர்சன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்

    ஆஷஸ் தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    இதற்கு முன் இங்கிலாந்து மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இரண்டு நாட்கள் கொண்ட முதல் பயிற்சி ஆட்டம் பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து நேற்றைய ரன்களுடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதனால் வெஸ்டன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.



    தொடக்க வீரர்களாக பிலிப்பே, ஹாப்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹாப்சன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து பிலிப்பே உடன் ஹின்ச்லிஃப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டது.

    ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஓவர்டன் ஆகிய வேகப்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார்கள். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் வெஸ்டன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முடியாமல் திணறினார்கள். ஒரு வழியாக 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிலிப்பேயும், 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹின்ச்லிஃப்பும் அவுட்டானார்கள்.

    அதன்பின் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீச வெஸ்டன் ஆஸ்திரேலியா 86 ஓவர்களில் 342 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.



    ஆண்டர்சன் 13 ஓவர்கள் வீசி 27  ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பிராட் 13 ஓவரில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஓவர்டன் 2 விக்கெட் வீழ்த்திய நிலையில் கிறிஸ் வோக்ஸ் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

    வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியை ஒரே நாளில் 342 ரன்கள் எடுக்க விட்டதால், இங்கிலாந்து அணி தனது பந்து வீச்சை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
    Next Story
    ×