search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி: குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் சாம்பியன்
    X

    புரோ கபடி: குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் சாம்பியன்

    சென்னையில் நடைபெற்ற புரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி 3-வது முறையாக பாட்னா பைரட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
    சென்னை:

    12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் கடந்த ஜூலை 28-ந்தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

    3 மாத காலம் நடைபெற்ற இந்த கபடி கொண்டாட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    பலம் வாய்ந்த பாட்னா அணிக்கு குஜராத் அணி ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் தொடக்கத்தில் குஜராத் அணி முன்னிலைப் பெற்றது. ஒரு கட்டத்தில் பீகார் 6-14 என பின்தங்கியிருந்தது. பின்னர் பாட்னா அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதி நேரத்தில் பீகார் அணி 21-18 முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்திலும் பீகார் அணி கையே ஓங்கியது. இறுதியில் பாட்னா அணி 55- 38 என மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
    Next Story
    ×