search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: சென்னையில் நாளை இறுதிப்போட்டி - பாட்னா-குஜராத் பலப்பரீட்சை
    X

    புரோ கபடி லீக்: சென்னையில் நாளை இறுதிப்போட்டி - பாட்னா-குஜராத் பலப்பரீட்சை

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடக்கும். இறுதிப் போட்டியில் பாட்னா பைரட்ஸ், அறிமுக அணியான குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    5-வது புரோ கபடி ‘லீக்’ தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்தது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

    12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், புனேரி புல்தான், அரியானா ஸ்டீரியர்ட்ஸ், யூ மும்பை, ஜெய்ப்பூர் பிங்க் பான்டர்ஸ், தபாஸ் டெல்லி ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் அறிமுக அணியான தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியாஸ், பாட்னா பைரட்ஸ், உ.பி.யோத்தா, பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

    ஒவ்வொரு அணிக்கும் 22 ஆட்டங்கள் இருக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘லீக்’ முடிவில் ‘ஏ’ பிரிவில் குஜராத், புனே, அரியானா ‘பி’ பிரிவில் பெங்கால், பாட்னா, உ.பி.யோத்தா ஆகிய 6 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    தமிழ் தலைவாஸ், மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி, பெங்களூர், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    தங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்த குஜராத், பெங்கால் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் போட்டியில் (குவாலிபையர் 1) மோதியது. குஜராத் 42-17 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டிகளில் (வெளியேற்றுதல் சுற்று) வென்று குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த குவாலிபையர் 2 போட்டியில் பாட்னா 47-44 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடக்கும். இறுதிப் போட்டியில் பாட்னா பைரட்ஸ், அறிமுக அணியான குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    2 முறை சாம்பியனான பாட்னா அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த அணி கேப்டன் பர்தீப் நார்வால் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். அவர் இதுவரை 350 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மோனு சோயத், விகாஸ், மனிஷ், ஜெய்தீப் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    கடந்த ஆண்டு நடந்த இரண்டு தொடர்களிலும் பாட்னா சாம்பியன் பட்டம் வென்றது. ஹாட்ரிக் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் பாட்னா இருக்கிறது.

    சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் அறிமுக போட்டியிலேயே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளது. அந்த அணி வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி வருகிறார்கள். ‘லீக்’கில் 22 ஆட்டத்தில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிராவுடன் 87 புள்ளி பெற்று இருந்தது.

    மேலும் ‘லீக்’ ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தி உள்ளதால் நம்பிக்கையுடன் இருக்கிறது. அறிமுக போட்டியிலேயே கோப்பையை வெல்லும் முனைப்பில் குஜராத் உள்ளது.
    Next Story
    ×