search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான முதல் டி20: 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
    X

    இலங்கைக்கு எதிரான முதல் டி20: 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

    இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    அபுதாபி:

    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை, ஒருநாள் தொடரை 0-5 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகாவும் தில்ஷான் முனவீராவும் களமிறங்கினர். முனவீரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து குணதிலகா 18 ரன்களும், சதீரா சமரவிக்ரமா 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியினரின் பந்துவிச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.



    இதனால் இலங்கை அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன்கள்சேர்த்தது. ஒரு முனையில் நிலைத்துநின்று விளையாடிய இலங்கை அணியின் சீகுகே பிரசன்னா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஹசன் அலி 3 விக்கெட்களும், உஷ்மான் கான், முகமது ஹபீஸ் தலா 2 விக்கெட்களும், இமாத் வாசிம், பஹிம் அஷ்ரப், ஷதப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து 20 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பகர் சமான் 6 ரன்களிலும், பாபர் அசாம் 1 ரன்னிலும், அஹமது ஷெசாத் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சோயப் மாலிக்-உடன் மொகமத் ஹபீஸ் ஜோடி சேர்ந்தார், இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

    பாகிஸ்தான் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோயப் மாலிக் 42 ரன்களுடனும், மொகமத் ஹபீஸ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணியின் விகும் சன்ஜெயா 2 விக்கெட்களும், சச்சித் பிரசன்னா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் அணியின் உஷ்மான் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
    Next Story
    ×