search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி: இறுதிப்போட்டியில் குஜராத்துடன் மோதுவது யார்? பாட்னா-பெங்கால் அணிகள் நாளை மோதல்
    X

    புரோ கபடி: இறுதிப்போட்டியில் குஜராத்துடன் மோதுவது யார்? பாட்னா-பெங்கால் அணிகள் நாளை மோதல்

    சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குஜராத்துடன் இறுதிப்போட்டியில் மோதும்.
    சென்னை:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

    மும்பையில் நேற்று நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட் அணி 42-17 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது. இதன்மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    அதை தொடர்ந்து நடந்த ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ 42-32 என்ற கணக்கில் புனேரி பல்தானை தோற்கடித்தது. இதன்மூலம் பாட்னா அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. தோல்வியால் புனே அணி வெளியேற்றப்பட்டது.

    இன்று ஓய்வு நாளாகும். ‘குவாலிபையர்2’ ஆட்டமும், இறுதிப்போட்டியும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குஜராத்துடன் இறுதிப்போட்டியில் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேறும். இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.



    இந்த தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் பெங்கால் ஒரு தடவை 41-38 என்ற கணக்கில் வென்று இருந்தது. மற்ற 2 ஆட்டமும் 37-37 மற்றும் 36-36 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது. இறுதிப்போட்டி 28-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×