search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 117 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
    X

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 117 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    புலவாயோ:

    ஜிம்பாப்வே சென்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் 21-ம் தேதி தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 219 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 159 ரன்னில் சுருண்டது. இதனை அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து இருந்தது.



    3-வது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியது. ரோஸ்டன் சேஸ் 91 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 372 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரோஸ்டன் சேஸ் 95 ரன்கல் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 443 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    ஜிம்பாப்வே அணியினர் நிதானமாக விளையாடினர். இருப்பினும் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணி 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணியின் மசகாட்சா 57 ரன்களும், சலொமன் மைர் 47 ரன்களும், பிரண்டன் டெய்லர் 73 ரன்களும், சிகந்தர் ரசா 30 ரன்களும், கிரிஸ் போபு 33 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்திய வெஸ்ட்இண்டீசின் தேவேந்திர பிசூ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. வெஸ்ட்இண்டீஸ் - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 29-ம் தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×