search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பெண்கள் டென்னிஸ்: சிமோனா ஹாலெப், வோஸ்னியாக்கி வெற்றி
    X

    உலக பெண்கள் டென்னிஸ்: சிமோனா ஹாலெப், வோஸ்னியாக்கி வெற்றி

    உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    சிங்கப்பூர்:

    உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள ‘டாப்-8’ வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகிறார்கள். ‘ரெட்’ பிரிவில் சிமோனா ஹாலெப், எலினா ஸ்விடோலினா, கரோலின் வோஸ்னியாக்கி, கரோலின் கார்சியா ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் கார்பின் முகுருஜா, கரோலினா பிளிஸ்கோவா, வீனஸ் வில்லியம்ஸ், ஜெலினா ஆஸ்டாபென்கோ ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.



    ரெட் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 8-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தார். இந்த ஆட்டம் 1 மணி 27 நிமிடம் நடந்தது. மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் 4-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) தோற்கடித்தார்.
    Next Story
    ×