search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை போட்டியில் 95 ரன்: ராஸ் டெய்லரை தனது பாணியில் பாராட்டிய சேவாக்
    X

    மும்பை போட்டியில் 95 ரன்: ராஸ் டெய்லரை தனது பாணியில் பாராட்டிய சேவாக்

    இந்தியாவிற்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 95 ரன்கள் குவித்த ராஸ் டெய்லரை தனது பாணியில் டுவிட்டரில் வாழ்த்து கூறிய சேவாக்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 280 ரன்கள் சேர்த்தது. பின்னர் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் - டாம் லாதம் அணியை வெற்றி பெற வைத்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தனர். அணியின் வெற்றிக்கு ஒரு ரன்கள் தேவை என்ற நிலையில் டெய்லர் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    95 ரன்கள் குவித்த ராஸ் டெய்லரை சேவாக் டுவிட்டரில் தனது பாணியில் பாராட்டியுள்ளார். டெய்லர் என்பதை தமிழில் துணை தைப்பவர் என்று அழைப்பர். இந்தியில் தர்ஜி (Darji) என்றால் டெய்லர். கடந்த 18-ந்தேதியும், 19-ந்தேதியும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி டெய்லருக்கு அதிக வேலை இருக்கும். இதை வைத்து சேவாக் டுவிட் செய்துள்ளார். அதற்கு டெய்லர் ஹிந்தியில் பதில் டுவிட்டர் செய்து அசத்தியுள்ளார்.

    சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சிறப்பாக விளையாடினீர்கள் தர்ஜி ஜி. தீபாவளி பண்டிகையின் ஆர்டர் நெருக்கடியை சமாளித்த பின்னர், சிறந்த முயற்சி’’ என்ற பதில் அளித்துள்ளார்.



    இதற்கு டெய்லர் ‘‘நன்றி சேவாக் பாய். அடுத்த தீபாவளியின்போது சில நாட்களுக்கு முன்பே உங்களது துணியை கொடுங்கள்... ஹேப்பி தீபாவளி’’ என்று பதில் அளித்தார்.



    அதற்கு சேவாக், ‘‘அடுத்த தீபாவளிக்கு எனது துணியை தைக்கும்போது ஒரு இஞ்ச் குறைவாக தைக்கவும். ராஸ் தி பாஸ். மோஸ்ட் ஸ்போர்ட்டிங்’’ என்று டுவிட் செய்தார்.



    இதற்கு டெய்லர் ‘‘இந்த தீபாவளிக்கு உங்கள் டெய்லர் வேலையை சரியாக செய்யவில்லையா?’’ என்று பதில் அளித்தார்.

    இதற்கு சேவாக், ‘‘உங்களுடைய உயர்தரமான வேலையை யாராலும் மேட்ச் செய்ய முடியாது. பார்ட்னர்ஷிப் அல்லது பேண்ட் ஆக இருந்தாலும்’’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×