search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
    X

    சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

    ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணி மற்றும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணி மற்றும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்தியா 2-1 என மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    இந்தியா ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லுவது இது 3-வது முறையாகும்.

    ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், மிக சிறந்த ஆட்டம். பெரிய வெற்றி. ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியை இந்தியா கொண்டாடி வருகிறது என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கொரிய வீரர் லீ ஹ்யூனை 21-10, 21-5 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில்,வாழ்த்துக்கள் கிடாம்பி. டென்மார்க் ஓபன் தொடரில் நீங்கள் பெற்ற சிறந்த வெற்றியால் ஒவ்வொரு இந்தியரும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×