search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவான், ரோகித் சர்மா சொற்ப ரன்களில் அவுட்: 28 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள்
    X

    தவான், ரோகித் சர்மா சொற்ப ரன்களில் அவுட்: 28 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தவான், ரோகித் சர்மா, கேதர் ஜாதவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் கோலி, தினேஷ் கார்த்திக் நிதானமாக விளையாடி வருகிறார்கள்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணீஷ் பாண்டே நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. தினேஷ் கார்த்திக், 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. சாஹல்.

    நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. மார்ட்டின் கப்தில், 2. கொலின் முன்றோ, 3. கேன் வில்லியம்சன், 4. ராஸ் டெய்லர், 5. நிக்கோல்ஸ், 6. கிராண்ட்ஹோம், 7. சான்ட்னெர், 8. மில்னே, 9. சவுத்தி, 10. போல்ட், 11. லாதம்.

    இந்திய அணியின் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முடிவு செய்தனர்.

    சவுத்தி வீசிய முதல் ஓவரில் தவான் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் டிரென்ட் போல்ட் பந்து வீச்சை எதிர்கொள்ள இருவரும் திணறினார்கள். 4-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கோட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அடுத்த ஓவரை சவுத்தி வீசினார். இந்த ஓவரின் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரோகித் சர்மா. ஆனால் போல்ட் வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார் ரோகிர் சர்மா. அவர் 18 பந்தில் 2 சிக்சருடன் 20 ரன்கள் சேர்த்தார். இந்தியா 29 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க வீரர்களை இழந்தது.



    அடுத்து வந்த கேதர் ஜாதவ் 12 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. மிகவும் பொறுமையாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 25-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார்.



    இந்தியா 28 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 57 ரன்னுடனும், தினேஷ் கார்த்திக் 37 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
    Next Story
    ×