search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்களது பந்து வீச்சுதான் உலகின் தலைசிறந்தது: பாகிஸ்தான் கேப்டன் சொல்கிறார்
    X

    எங்களது பந்து வீச்சுதான் உலகின் தலைசிறந்தது: பாகிஸ்தான் கேப்டன் சொல்கிறார்

    உலகின் தலைசிறந்த பந்து வீச்சு தாக்குதலில் நாங்கள்தான் நம்பர் ஒன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.
    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, தற்போது இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் நான்கு போட்டிகளை வென்று அசத்தியுள்ளது.

    அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு தாக்குதல்தான் உலகின் தலைசிறந்தது என்று அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அஹமது கூறியுள்ளார்.

    இதுகுறித்து சர்பிராஸ் அஹமது கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். எதிரணியை 230 முதல் 240 ரன்களுக்குள் கட்டுப்படுத்துகிறோம். பின்னர், எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறுகிறோம். தற்போது நாங்களில் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறோம். சேஸிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறோம்.



    நாங்கள் பந்து வீச்சாளர்களுக்கு கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். குறிப்பாக ஹசன் அலிக்கு. அவர் நாளுக்கு நாள் தனது பந்து வீச்சில் வளர்ந்து வருகிறார். தற்போது ஐ.சி.சி. தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். எங்கள் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அவரை நான் பாராட்டுகிறேன்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப், உஸ்மான் கான், பஹீம் அஷ்ரப், ரும்மான் ரயீஷ், ஜூனைத் கான் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசுகறார்கள். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார். வெளியில் இருக்கும் வீரர்கள் (Bench Strenght) வலிமையாக இருக்கிறார்கள். இதுதான் முக்கியமானது’’ என்றார்.
    Next Story
    ×