search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்; தினேஷ் கார்த்திக் உள்ளே, மணீஷ் பாண்டே அவுட்
    X

    மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்; தினேஷ் கார்த்திக் உள்ளே, மணீஷ் பாண்டே அவுட்

    மும்பையில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

    1.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மணீஷ் பாண்டே நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. தினேஷ் கார்த்திக், 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. சாஹல்.

    நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. மார்ட்டின் கப்தில், 2. கொலின் முன்றோ, 3. கேன் வில்லியம்சன், 4. ராஸ் டெய்லர், 5. நிக்கோல்ஸ், 6. கிராண்ட்ஹோம், 7. சான்ட்னெர், 8. மில்னே, 9. சவுத்தி, 10. போல்ட், 11. லாதம்.
    Next Story
    ×