search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே
    X

    முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே

    ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 219 ரன்னில் சுருண்டது.
    ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி அந்த அணியின் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் கோப் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    4-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் பொவேல் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சேஸ் 31 ரன்னில் வெளியேறினார்.



    அடுத்தடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 219 ரன்னில் சுருண்டது. சாய் ஹோப் 90 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 174 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ், அதன்பின் 46 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

    ஜிம்பாப்வே அணி சார்பில் கிரீமர் 4 விக்கெட்டும், வில்லியம்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×