search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்

    பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி வீரர்கள் மறுப்பு தெரிவித்ததால் இலங்கை அணி கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி (வியாழக்கிழமை) அபுதாபியில் தொடங்குகிறது. 2-வது போட்டி 27-ந்தேதி அதே மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி லாகூரில் நடக்க இருக்கிறது.

    இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் 2009-ம் ஆண்டில் இருந்து எந்த அணியும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவில்லை. மீண்டும் சர்வதேச போட்டியை புதுப்பிக்கும் வகையில் இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. இதற்கு இலங்கை அணி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது.

    ஆனால் இலங்கை அணியின் பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கிறார்கள். கேப்டன் உபுல் தரங்கா மற்றும் மலிங்கா ஆகியோர் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளனர்.



    இந்நிலையில் ‘‘லாகூர் போட்டிக்கும் சேர்ந்துதான் இலங்கை வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். நாங்கள் தேர்வு செய்யும் வீரர்கள் லாகூர் போட்டியில் விளையாடவும் தயாராக வேண்டும்’’ என அந்நாட்டு தலைமை தேர்வாளர் கிரேம் லேப்ரூய் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள வீரர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
    Next Story
    ×