search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை
    X

    முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது.
    மும்பை:

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது.

    வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதேபோல நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    நியூசிலாந்து அணி கடந்த ஆண்டு இதே மாதம் இந்தியாவில் விளையாடிய போது ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் அந்த அணியை சந்திக்கும்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையில் வீராட்கோலி அணி உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய தவான் அணிக்கு திரும்பி உள்ளார். அவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக ஆடுவார். தொடக்க வரிசையில் ஆடிய ரகானே மிடில் ஆர்டருக்கு மாற்றப்படுவாரா? அல்லது சுழற்றி விடப்படுவாரா? என்பது தெரியவில்லை.

    ரகானேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே நீக்கப்படுவார். ஆஸ்திரேலியா தொடரில் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனியர் வீரரான டோனியின் இடம் ஆட்டம் கானும் வகையில் இருப்பதால் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது. கேப்டன் வீராட்கோலி, ரோகித்சர்மா, ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்திய அணியின் பலமே சுழற்பந்து வீச்சு தான். அஸ்வின், ஜடேஜா தொடர்ச்சியாக 3 தொடரில் ஒரங்கட்டப்பட்டனர். குல்தீப் யாதவும், யகவேந்திர சஹானும் அபாரமாக பந்துவீசி வருகிறார்கள். வேகப்பந்தில் புவனேஷ்வர் குமார், பும்ரா நல்ல நிலையில் உள்ளனர்.



    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சமபலத்துடன் உள்ளது. கேப்டன் வில்லியம்சன், குப்தில், டெய்லர், முன்ரோ போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், சவுத்தி, மிலின் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு போல்ட் சவாலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    கடந்த முறை தொடரை இழந்த நியூசிலாந்து அணி இந்த தடவை இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்த ஆட்டம் பகல்-இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர் ஜாதவ், டோனி, மனிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், பும்ரா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ‌ஷர்துல் தாக்டர்.

    நியூசிலாந்து: வில்லியம் சன் (கேப்டன்), குப்தில், டாம் லாதம், ரோஸ் டெய்லர், கோலின் கிராண்ட் ஹோம், காலின் முன்ரோ, நிக்கோ லஸ், சான்ட்னர், ஜார்ஜ் வொர்க்கர், டிம் சவுத்தி, போல்ட், மிலின், பிலிப்ஸ், ஹென்றி, சோதி.
    Next Story
    ×