search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருவருடத்திற்குப் பிறகு அடுத்த மாதம் களமிறங்க ஸ்டெயின் திட்டம்
    X

    ஒருவருடத்திற்குப் பிறகு அடுத்த மாதம் களமிறங்க ஸ்டெயின் திட்டம்

    தோள்பட்டை காயம் காரணமாக ஒரு வருடமாக விளையாடாமல் இருக்கும் ஸ்டெயின் அடுத்த மாதம் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஸ்டெயின் திகழ்ந்து வந்தார். அதிவேகமாக பந்து வீசும் ஸ்டெயின் பெரும்பாலும் காயத்தால் அவதியுற்றது கிடையாது. அதற்கேற்றவாறு தனது உடல்நிலையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. அப்போது ஸ்டெயின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் கடந்த ஒரு வருடமாக தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார்.

    சமீபத்தில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். தற்போது அவரது உடல்நிலை நன்கு தேறிவிட்டது. இதனால் அடுத்த மாதத்தில் இருந்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் சார்பில் குளோபல் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. தற்போது இந்த தொடர் தள்ளிப் போகியுள்ளது. இது ஸ்டெயின் களம் இறங்க நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.



    மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘மீண்டும் அணிக்கு திரும்புவது மிக விரைவில் நடக்கும். கடந்த திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பாக பந்து வீசினேன். நாளுக்கு நாள் வேகத்தை அதிகரித்தேன். புதன் கிழமை 26 பந்துகள் வீசிய நான், வெள்ளிக்கிழமை 30 பந்துகள் வீசினேன்.

    தற்போதைய நிலையில் நான் 70 முதல் 80 சதவீதம் வரை ரன்அப்  சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என பந்து வீசுவேன். ஒவ்வொரு வாரமும் பந்து வீசும் சதவீதத்தை அதிகரித்து, டி20 கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும்போது, நான் முழு ரன்அப், முழு வேகத்துடன் பந்து வீசுவேன்’’ என்றார்.

    இதனால் விரைவில் ஸ்டெயின் வேகப்பந்து வீச்சை ரசிகர்கள் பார்க்கலாம்.
    Next Story
    ×