search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை ஜூனியர் கால்பந்து: கால் இறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
    X

    உலக கோப்பை ஜூனியர் கால்பந்து: கால் இறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்

    17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை ஜூனியர் கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது.
    புதுடெல்லி:

    17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை ஜூனியர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவில் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

    24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

    14-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. ‘ஏ‘ பிரிவில் கானா, கொலம்பியா, அமெரிக்கா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, ’சி’ பிரிவில் ஈரான், ஜெர்மனி, ‘டி’ பிரிவில் பிரேசில், ஸ்பெயின், நைஜர், ‘இ’ பிரிவில் பிரான்ஸ், ஜப்பான், ஹோண்டுராஸ் ‘எப்’ பிரிவில் இங்கிலாந்து, ஈராக், மெக்சிகோ ஆகிய 16 அணிகள் 2-வது சுற்றான நாக்அவுட்டுக்கு தகுதி பெற்றன.

    இந்தியா உள்பட 8 அணிகள் வெளியேற்றப்பட்டன. நாக்- அவுட் சுற்று ஆட்டங்கள் 16-ந் தேதி தொடங்கி நடந்தது. நேற்றுடன் நாக்-அவுட் சுற்று போட்டிகள் முடிந்தது.

    இதன் முடிவில் ஜெர்மனி, பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து, மாலி, கானா, ஸ்பெயின், ஈரான் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    கால்இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. கவுகாத்தியில் மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கானா-மாலி அணிகளும், கோவாவில் இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் அமெரிக்கா - இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    நாளை மறுநாள் இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இங்கிலாந்து அணி லீக்கில் தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. தோல்வியே சந்திக்காமல் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது.
    Next Story
    ×