search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாவது பயிற்சி ஆட்டம்: 33 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
    X

    இரண்டாவது பயிற்சி ஆட்டம்: 33 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்குமுன் நியூசிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் டெய்லர் மற்றும் லாதம் ஆகிய இருவரும் சதமடித்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்கள். டெய்லர் 102 ரன்னும், லாதம் 108 ரன்னும் சேர்த்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்தது.

    இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி சார்பில் உனத்கட் 10 ஓவரில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    அதன்பின்னர் 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கருண் நாயர் அரை சதமடித்து அசத்தினார். அவர் 523 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயச் ஐயர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் களமிறங்கிய குர்கீரத் சிங் மான் அதிரடியாக ஆடினார். அவர் 46 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து சீரான் இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தது. இறுதியில் இந்திய போர்டு பிரசிடெண்ட் அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 310 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, நியூசிலாந்து அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் மிச்சேல் சாண்டர் 3 விக்கெட், டிம் சவுத்தி, காலின் மன்றோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 22-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
    Next Story
    ×