search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை: இந்தியா-தென்கொரியா ஆட்டம் சமனில் முடிந்தது
    X

    ஆசிய கோப்பை: இந்தியா-தென்கொரியா ஆட்டம் சமனில் முடிந்தது

    வங்காளதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் 10-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 2-வது போட்டியில் 7-0 என்ற கணக்கில் வங்காளதேசத்தையும் வீழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய ஹாக்கி அணிக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.

    முதலில் தென் கொரிய அணி சார்பில் லீ ஜங்ஜன் 41 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, அந்த அணி முன்னிலை வகிக்க உதவினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் இறுதியில் இந்திய வீரர் குர்ஜந்த் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இறுதியில், இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா தனது அடுத்த போட்டியில் மலேசிய அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×