search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி: லீக் சுற்று போட்டிகளில் பெங்களூரு புல்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி
    X

    புரோ கபடி: லீக் சுற்று போட்டிகளில் பெங்களூரு புல்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி

    புனே நகரில் நடைபெற்ற புரோ கபடி லீக் சுற்று போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

    புனே:

    5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். புனே சுற்று ஆட்டங்கள் 13-ம் தேதி தொடங்கின. 

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி, உ.பி. யோத்தா அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கியது முதல் இறுதிவரை பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது. முழு ஆட்டநேர முடிவில் 64-24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இப்போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணி கேப்டன் ரோஹித் குமார் அதிகபட்சமாக 30 தொடுபுள்ளிகளும் எடுத்தார். இது ஒரே புரோ கபடி லீக் போட்டியில் ஒரு தனிப்பட்ட வீரர் பெரும் அதிகபட்ச புள்ளிகளாகும்.

    பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 31-27 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. அரியானா அணியின் பிரசாந்த் குமார் ராய் அதிகபட்சமாக 12 தொடுபுள்ளிகள் எடுத்தார். 



    இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 79 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், புனேரி பால்டன் அணி 74 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் உ.பி. யோத்தா அணி 60 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், பெங்களூரு புல்ஸ் அணி 54 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×