search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    30 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய பிரசிடென்ட் லெவன் அணி
    X

    30 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய பிரசிடென்ட் லெவன் அணி

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இளம் வீரரான ப்ரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆட்டத்தால் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னோட்டமாக நியூசிலாந்து அணி இன்று மும்பையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணியை சந்தித்தது.


    ப்ரித்வி ஷா

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய 17 வயதே ஆன ப்ரித்வி ஷா 66 ரன்னும், லோகேஷ் ராகுல் 68 ரன்னும், கருண் நாயர் 78 ரன்னும் சேர்த்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    லோகேஷ் ராகுல்

    பின்னர் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 265 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் உனத்கட், சுழற்பந்து வீச்சாளர் நதீம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×