search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் வெற்றி
    X

    U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் வெற்றி

    17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிகள் வெற்றி பெற்றன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று (16-ம் தேதி) தொடங்கியது.

    டெல்லியில் 5 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் ஜெர்மனி, கொலம்பியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஜெர்மனி அணி அதிரடியாக விளையாடியது. போட்டி தொடங்கிய 7-வது நிமிடம் ஜெர்மனியின் ஜன்-ஃபிடே அர்ப் கோல் அடித்தார். அடுத்து 39-வது நிமிடத்தில் ஜெர்மனியின் யான் பிசெக் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்ட முடிவில் ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது.



    அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜான் யெபோவா கோல் அடித்தார். அடுத்து 65-வது நிமிடம் ஜெர்மனியின் ஜன்-ஃபிடே அர்ப் தனது இரண்டாவது கோல் அடித்தார். கொலம்பியா அணியினர் அனைத்து கோல் போடும் முயற்சிகளையும் ஜெர்மனி வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    டெல்லியில் 8 மணிக்கு தொடங்கிய இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் அமெரிக்கா - பராகுவே அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அமெரிக்கா அணியின் டிம் வே 19-வது, 53-வது மற்றும் 77-வது நிமிடங்களில் மூன்று கோல்கள் அடித்தார். இதுதவிர கார்லிடன் 63-வது நிமிடத்திலும், சார்ஜண்ட் 74-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். அமெரிக்கா அணியும் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

    நாளை கவுஹாத்தியில் நடைபெறும் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் மாலி - ஈராக், பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×