search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா ஜோடிகளான குயின்டான் டி காக் - ஹசிம் அம்லா சாதனை
    X

    தென்ஆப்பிரிக்கா ஜோடிகளான குயின்டான் டி காக் - ஹசிம் அம்லா சாதனை

    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து குயின்டான் டி காக் - ஹசிம் அம்லா சாதனைப் படைத்துள்ளனர்.
    தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 42.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 282 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குயின்டான் டி காக் 168 ரன்களும், ஹசிம் அம்லா 110 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் இருவரும் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர்.



    விக்கெட் இழக்காமல் 282 ரன்கள் குவித்த முதல் ஜோடி என்ற உலக சாதனைகள் படைத்துள்ளது. அத்துடன் இந்த ஜோடி தென்ஆப்பிரிக்கா அணிக்காக அதிர ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

    அம்லா - டி காக் ஜோடி 3664 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது. கிப்ஸ் - ஸ்மித் ஜோடி 3607 ரன்கள் குவித்துள்ளது. கிப்ஸ் - கல்லீ்ஸ் ஜோடி 3166 ரன்கள் குவித்துள்ளது. அம்லா - டி வில்லியர்ஸ் ஜோடி 2955 ரன்களும், கிப்ஸ் - கிர்ஸ்டன் ஜோடி 2906 ரன்களும் குவித்துள்ளது.
    Next Story
    ×