search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி: 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
    X

    ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி: 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

    ஜப்பானில் வருகின்ற 28-ம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் விளையாடும் 18 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜப்பானில் வருகின்ற அக்டோபர் 28-ம் தேதி 9-வது பெண்கள் ஹாக்கி ஆசியக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை ஹாக்கி இந்தியா இன்று அறிவித்தது.

    ராணி ராம்பால் கேப்டனாகவும், கோல் கீப்பர் சவீதா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுசிலா சானு புக்ராம்பம், நவ்நீத் கர், நவ்கோட் கர் மற்றும் சோனிகா ஆகியோர் புதியதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற படி நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போட்டியின் போது விளையாடிய அணியில் உள்ளவர்கள் விளையாடுகின்றனர்.

    ரஜனி எதிமார்பு, தீப் கிரேஸ் எக்கா, சுனிதா லக்ரா, சுமன் தேவி தவ்டம், குர்ஜித் கர், நமிதா டோப்போ, நிக்கி பிரதான், மோனிகா, லிலிமா மின்ஸ், நேகா கோயல், வந்தனா கட்டாரியா மற்றும் லால்ரேம்சியாமி ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    ஹரேந்திர சிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி விளையாடும் முதல் ஆசிய கோப்பை இதுவாகும். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் லண்டனில் நடைபெறும் 2018 ஆம் ஆண்டிற்கான பெண்கள் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×