search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்தியா
    X

    ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்தியா

    ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
    டாக்கா:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா ஜப்பான், வங்காளதேசம் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.  

    இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது. இந்திய அணி சார்பில்  சாங்லின்சனா சிங் 17-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 44-வது நிமிடத்திலும், ரமன்தீப் சிங் 45-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

    பாகிஸ்தான் தரப்பில் அலி ஷான் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, இந்தியா பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    Next Story
    ×