search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் எப்.சி. கோல்கீப்பிங் பயிற்சியாளராக டோனி வார்னர் நியமனம்
    X

    சென்னையின் எப்.சி. கோல்கீப்பிங் பயிற்சியாளராக டோனி வார்னர் நியமனம்

    சென்னையின் எப்.சி. கோல்கீப்பிங் பயிற்சியாளராக முன்னாள் கால்பந்து வீரர் டோனி வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்) போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணியின் புதிய கோல்கீப்பிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-18 ம் ஆண்டின் இந்திய சூப்பர் லீக்  போட்டிக்கான பயிற்சியாளராக  43-வயதான முன்னாள் கால்பந்து வீரர் டோனி வார்னர்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவர் இங்கிலாந்து அணியில் கோல்கீப்பராக விளையாடி உள்ளார். ட்டினிதாத் மற்றும் டோபகோ ஆகிய இரு அணிகளுக்காக சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார். மேலும், போல்டன் வாண்டர்ஸ் அணியின் கோல்கீப்பிங் பயிற்சியாளராக பணியாற்றினார்.

     கிளப்பின் தலைமை பயிற்சியாளர் ஜான் க்ரேகோரி, உதவி பயிற்சியாளர்கள் மார்க் லில்லிஸ் மற்றும் சையத் சபீர் பாஷா, விளையாட்டு விஞ்ஞானி நியால் கிளார் ஆகியோருடன் இணைந்து பணிபுரிவார் என கூறப்பட்டது.

    பயிற்சியாளராக பதவியேற்ற வார்னர், 'சென்னையின் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜான் க்ரேகோரி போன்ற பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும். அணியின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் செயலாற்றுவேன்' என கூறினார்.

    சென்னையின் அணி தாய்லாந்தின் ஹூயா கின்னில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×