search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்
    X

    ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்

    பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று நடக்கிறது.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையே பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

    இதன் முதலாவது ஒரு நாள் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு இடம் கிடைக்கவில்லை.

    டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 148 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில் 85-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டங்களில் முடிவு இல்லை.
    Next Story
    ×