search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக் போட்டிகளில் உ.பி. யோத்தா அணி வெற்றி
    X

    புரோ கபடி லீக் போட்டிகளில் உ.பி. யோத்தா அணி வெற்றி

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி தொடரின் லீக் சுற்று போட்டியில் உ.பி. யோத்தா அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 53-32 என வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

    இன்று (12-ம் தேதி) நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி, உ.பி. யோத்தா அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே உ.பி. அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினர். முதல் பாதி ஆட்டநேர முடிவில் 28-16 என உ.பி. யோத்தா அணி முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி நேர ஆட்டத்திலும் உ.பி. அணியினர் அதிரடியாக விளையாடினர். இதனால் உ.பி. அணி, 53-32 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்றது. உ.பி. அணியின் ரிஷாங் தேவதிகா அதிராடியாக விளையாடி 28 தொடுபுள்ளிகள் எடுத்தார். இது ஒரே புரோ கபடி லீக் போட்டியில் ஒருவர் எடுத்த அதிகபட்ச தொடுபுள்ளிகளாகும். 



    இன்றைய ஆட்டத்தின் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி 51 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் உ.பி. யோத்தா அணி 59 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    இன்றுடன் ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. நாளை புனே சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. நாளை (12-ம் தேதி) நடைபெறும் லீக் போட்டியில் புனேரி பால்டன் - குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 
    Next Story
    ×