search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஓவரிலேயே ரோகித், கோலி விக்கெட்டை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது: புவனேஷ்வர் குமார்
    X

    முதல் ஓவரிலேயே ரோகித், கோலி விக்கெட்டை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது: புவனேஷ்வர் குமார்

    முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டை இழந்ததால் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது என வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
    கவுகாத்தி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி-20 போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது. இதைதொடர்ந்து நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 

    கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 118 ரன்னில் சுருண்டது. அதன்பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரோகித் மற்றும் கோலி ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக புவனேஷ்வர் குமார் கூறுகையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெகண்டிராப் மிக நல்ல முறையில் பந்து வீசினார். அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானோம்.

    இந்த தோல்விக்கு தனிப்பட்ட ஒருவர் மட்டுமே காரணம் என யாரை நோக்கியும் குற்றம் சாட்ட முடியாது. மொத்தத்தில் எங்களுக்கு சோகமான நாளாக அமைந்து விட்டது, என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×