search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபனுக்கு செரீனா திரும்புவார்: ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை
    X

    ஆஸ்திரேலிய ஓபனுக்கு செரீனா திரும்புவார்: ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை

    டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு திரும்புவார் என்று ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    டென்னிஸ் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாளராக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இருந்து வருகிறார். 35 வயதாகும் இவர், இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஒபன் தொடரின் விளையாடிய செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அதன்பின் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அறிவித்தார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும்போது கர்ப்பமாக இருந்தேன் என்று கூறியிருந்தார்.

    பின்னர் பிரெஞ்ச், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனில் கலந்து கொள்ளவில்லை. கடந்த மாதம் 1-ந்தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பிணியாக இருக்கும்போது குழந்தை பிறந்தபிறகு, ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    அத்துடன் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நோவக் டிஜோகோவிக், முர்ரே, கெய் நிஷிகோரி, ஸ்டான்  வாவ்ரிங்கா ஆகியோரும் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்.

    ஆஸ்திரேலிய ஒபனின் பரிசுத் தொகை 4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×