search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்: ஐ.சி.சி. ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல்
    X

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்: ஐ.சி.சி. ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல்

    நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் ஐ.சி.சி. கூட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு ஒப்பதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கிரிக்கெட் போட்டியில் காலத்திற்கு ஏற்ப ஐ.சி.சி. பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக மாறியது.

    பின்னர் 50 ஓவர் கொண்ட போட்டி தற்போது டி20 என அழைக்கப்படும் 20 ஓவர் போட்டியாக மாறியுள்ளது. இதற்கு உலகளவில் அதிக அளவில் ஆதரவு உள்ளது. இதனால் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் டி20 லீக் என்ற தொடரை ஆரம்பித்து நடத்தி வருகிறது.

    இதனால் கிரிக்கெட்டின் அடையாளம் என்று கருதப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிற்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காப்பாற்ற பகல் - இரவு ஆட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.



    டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் முன்னணி அணிகள் மட்டுமே இரு நாடுகளுக்கிடையிலான தொடரில் மட்டுமே விளையாட விரும்புகிறது. அனைத்து நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னுரிமை பெரும் வகையில் உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் தொடரை நடத்த ஐ.சி.சி. விரும்பியது.

    இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை சொந்த மைதானத்திலும், வெளிநாட்டிலும் மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.



    இந்த தொடர் 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு வருடங்களாக நடத்தப்பட இருக்கிறது. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை ஐ.சி.சி.யின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ஐ.சி.சி. ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×