search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளூர் ஒருநாள் போட்டியில் 8 பேரை அவுட்டாக்கி ஆஸி. விக்கெட் கீப்பர் சாதனை
    X

    உள்ளூர் ஒருநாள் போட்டியில் 8 பேரை அவுட்டாக்கி ஆஸி. விக்கெட் கீப்பர் சாதனை

    உள்ளூர் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் நெவில் 8 பேரை அவுட்டாக்கி சாதனைப் படைத்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் - ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. பின்னர் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா லெவன் அணி 41 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா லெவன் அணி பேட்டிங் செய்யும்போது நியூ சவுத் வேல்ஸ் அணி விக்கெட் கீப்பர் நெவில் 8 பேரை கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவுட்டாக்கினார். இதன்மூலம் ‘லிஸ்ட் ஏ’ என அழைக்கப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டியில் 8 பேரை அவுட்டாக்கி நெவில் உலக சாதனைப் படைத்துள்ளார்.



    இதற்கு முன் 1982-ம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியான சோமர்செட் விக்கெட் கீப்பர் டெரிக் டெய்லர் 8 பேரை கேட்ச் செய்து அவுட்டாக்கியுள்ளார். 1997-98-ல் போலந்து விக்கெட் கீப்பர் ஸ்டீவ் பால்ஃபிராமேன் ஐந்து கேட்ச், 3 ஸ்டம்பிங் மூலம் 8 பேரை வெளியேற்றியுள்ளார். 2001-ல் இங்கிலாந்து கவுண்டி அணியான வொர்செஸ்டர்ஷைர் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பைப்பர் 8 பேரை கேட்ச் மூலம் வெளியேற்றியுள்ளார். தற்போது நெவில் 6 கேட்ச், 2 ஸ்டம்பிங் மூலம் 8 பேரை வெளியேற்றியுள்ளார்.
    Next Story
    ×