search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்
    X

    ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்

    இரவு கேளிக்கை விடுதி முன்பு ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரை தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆஷஸ் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோன்ஸ். பிளின்டாப்பிற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார்.

    கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது போட்டியில் விளையாடிய பின்னர், பென் ஸ்டோக்ஸ் சக நண்பர்களுடன் பிரிஸ்டோலில் உள்ள நள்ளிரவு நைட் கிளப் (இரவு நேர கேளிக்கை விடுதி) சென்றுள்ளார். அதிகாலை திரும்பியபோது வாலிபர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பென் ஸ்டோக்ஸ் அந்த வாலிபரை தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த அந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான போலீசார் பென் ஸ்டோக்ஸை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் காலை ரிலீஸ் செய்தனர்.

    இது தொடர்பான வீடியோ வெளியானது. அந்த வீடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான வரும் 28-ந்தேதி இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது.



    இதற்கான இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலிய புறப்படமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்நிலையில் விசாரணை முடிவடையாததால் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

    பென் ஸ்டோக்ஸ் உடன் அலெக்ஸ் ஹேல்ஸ், பேர்ஸ்டோவ், ஜேக் பால், பிளங்கெட் ஆகியோரும் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
    Next Story
    ×