search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே ஓவரில் 32 ரன்கள்: டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலிய வீரர் ராஸ்
    X

    ஒரே ஓவரில் 32 ரன்கள்: டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலிய வீரர் ராஸ்

    நாதன் லயன் வீசிய ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் குவித்த டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார் அலெக்ஸ் ராஸ்.
    ஆஸ்திரேலியாவில் ஜே.எல்.டி. ஒருநாள் கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சவுத் ஆஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த சவுத் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்தது. 40-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரை ராஸ் சந்தித்தார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், அடுத்த இரண்டு பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பி சிக்ஸ் விளாசினார். 4-வது பந்தை பவுண்டரிக்கு அடித்த ராஸ், அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரி, நான்கு சிக்சர்களுடன் 32 ரன்கள் குவித்தார்.



    இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் வீசிய ஓவரில் டி வில்லியர்ஸ் 32 ரன்கள் குவித்தார். இரண்டு நோ-பால் உடன் 34 ரன்கள் கிடைத்தது. தற்போது ராஸ் அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

    தொடர்ந்து விளையாடிய ராஸ் 85 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணி 301 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    Next Story
    ×