search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெஹ்ரா பிட் என்றால், தெண்டுல்கரை போல் 42 வயது வரை விளையாட முடியும்: சேவாக்
    X

    நெஹ்ரா பிட் என்றால், தெண்டுல்கரை போல் 42 வயது வரை விளையாட முடியும்: சேவாக்

    ஆசிஷ் நெஹ்ரா பிட் என்றால் சச்சின் தெண்டுல்கர் போல் 42 வயது வரை இந்திய அணிக்காக விளையாட முடியும் என சேவாக் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் நாளைமறுநாள் (7-ந்தேதி) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா அணியில் இடம்பிடித்துள்ளார்.

    38 வயதாகும் ஆசிஷ் நெஹ்ரா தீவிர உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை பிட்-ஆக வைத்திருப்பதால்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். 38 வயதாகும் நெஹ்ரா உடற்தகுதியோடு இருக்கிறார் என்றால், அவரால் சச்சின் தெண்டுல்கர்போல் 42 வயது வரை விளையாட முடியும் என சேவாக் கூறியுள்ளார்.

    ஆசிஷ் நெஹ்ரா குறித்து சேவாக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆசிஷ் நெஹ்ரா இடம்பிடித்திருப்பதால் நான் எந்தவித ஆச்சரியமும் அடையவில்லை. அவர் அணியில் இடம்பிடித்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மேலும் வருங்காலத்தில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும்பொழுது, அவரது உடற்தகுதிக்குபபின் ரகசியம் உள்ளது. அவர் சுமார் 8 மணி நேரம் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார். இன்றைக்கு அவர் டி20 அணியில் இடம்பிடித்திருக்கிறார் என்றால், யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்துள்ளார். யோ-யோ டெஸ்டில் 17 முதல் 18 புள்ளிகள் பெற்றுள்ளார். விராட் கோலியின் ஸ்கோரை தொட்டுள்ளார்.



    நெஹ்ரா ஒரு வேகப்பந்து வீச்சாளர். அவர் ஓடும்போது எந்தவித ஒரு பிரச்சினையையும் சந்திக்கப்போவதில்லை. யோ-யோ டெஸ்டில் அவர் பெரிதாக பிரச்சினையை சந்திக்க வாய்ப்பில்லை. நெஹ்ராவை போல் உடலை பிட்-ஆக வைக்க வேண்டுமென்றால், ஜிம்மில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

    யோ-யோ டெஸ்டில் அவரால் 20 மீட்டரை தூரத்தை எளிதாக கடக்க முடியும். நெஹ்ரா 6 அடி உயரம் என்பதால், அவரது உயரம் சாதகமாக அமைந்துள்ளது.

    உலகக்கோப்பையில் விளையாட வயது ஒரு அளவு கோல் என்று நான் நினைக்கவில்லை. பிட்-அக இருந்து, விக்கெட்டுக்கள் கைப்பற்றி, குறைந்த அளவு ரன்கள் கொடுத்தால் அவரை ஏன் அணியில் சேர்க்கக்கூடாது. ஜெயசூர்யா, சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் 42 வயது வரை விளையாடினார்கள். இவர்கள் 42 வயது வரை விளையாடும்போது நெஹ்ரா மட்டும் ஏன் விளையாடக்கூடாது?’’ என்றார்.
    Next Story
    ×