search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக முடியும்: சவுரவ் கங்குலி
    X

    விராட் கோலி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக முடியும்: சவுரவ் கங்குலி

    விராட் கோலி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக முடியும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி கேப்டனாக திகழ்ந்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இவரது தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியது இவரது காலத்தில்தான். ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தவர். தற்போது மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார்.

    இந்தியாவிற்கு மூன்று உலகக்கோப்பைகளை வாங்கிக் கொடுத்த டோனிக்குப்பிறகு, தற்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். பல்வேறு வெற்றிகளை இந்திய அணிக்கு தேடிக்கொடுத்துள்ள விராட் கோலியால், தலைசிறந்த இந்திய கேப்டன்களில் ஒருவராக ஆக முடியும் என தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகும் தகுதியை விராட் கோலி பெற்றுள்ளார். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்திய அணிக்கு அடுத்த 15 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த காலக்கட்டத்தில் இந்தியா தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

    அவர் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார். அணியை தயார் செய்து கொண்டிருக்கிறார். வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். இந்திய அணி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தென்ஆப்பிரிக்கா செல்லும்போது இந்திய அணி சவால்களை சந்திக்கும். ஆனால், தென்ஆப்பிரிக்கா மண்ணில் தற்போதைய இந்திய அணி சிறப்பாக செயல்படும்’’ என்றார்.
    Next Story
    ×