search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு
    X

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் முறையே கேப்டவுன், செஞ்சூரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.
    இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செய்கிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 30-31-ந்தேதி இரண்டு நாட்கள் கொண்டு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. அதன்பின் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு 5-ந்தேதி தொடங்குகிறது.



    முதல் டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கேப்டவுனில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை செஞ்சூரியனில் நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

    அதன்பின் ஒருநாள் போட்டி தொடர் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது.

    முதல் போட்டி : பிப்ரவரி 1-ந்தேதி; டர்பன் (பகல்-இரவு)
    2-வது போட்டி : பிப்ரவரி 4-ந்தேதி; செஞ்சூரியன் (பகல்)
    3-வது போட்டி : பிப்ரவரி 7-ந்தேதி; கேப்டவுன் (பகல்-இரவு)
    4-வது போட்டி : பிப்ரவரி 10-ந்தேதி; ஜோகன்னஸ்பர்க் (பகல்-இரவு)
    5-வது போட்டி : பிப்ரவரி 13-ந்தேதி; போர்ட் எலிசபெத் (பகல்-இரவு)
    6-வது போட்டி : பிப்ரவரி 16-ந்தேதி; செஞ்சூரியன் (பகல்-இரவு)



    3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்

    முதல் போட்டி : பிப்ரவரி 18-ந்தேதி; ஜோகன்னஸ்பர்க் (பகல்)
    2-வது போட்டி : பிப்ரவரி 21-ந்தேதி; செஞ்சூரியன் (பகல்-இரவு)
    3-வது போட்டி : பிப்ரவரி 24-ந்தேதி; கேப்டவுன் (பகல்-இரவு)

    பெண்களுக்கான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.
    Next Story
    ×