search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், குஜராத்துடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், குஜராத்துடன் இன்று மோதல்

    புரோ கபடி 94-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ் அணியுடன் இன்று மோதுகின்றது.
    புதுடெல்லி:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐதராபாத், நாக்பூர், ஆமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெற்று  முடிந்தன.

    இன்று இரவு 8 மணிக்கு 94-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் & ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி 12 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் 27 புள்ளிகள் பெற்று அந்த பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. அஜய் தாக்கூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புல்ஸ், உ.பி. யோதா, பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளை வென்று இருந்தது.

    தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகளிடம் 2 முறையும், பெங்களூர், தபாங் டெல்லி, பெங்கால் ஆகிய அணிகளிடம் 1 முறையும் தோற்று இருந்தது. அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.ஆகிய அணிகளிடம் ‘டை’ செய்து இருந்தது.

    தமிழ் தலைவாஸ் அணி இன்றைய ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி மிகவும் பலம் பொருந்தியவை என்பதால் கடும் சவாலாக இருக்கும். பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் ‘டேக்கிள்’ மீதம் சிறப்பாக இருந்தது. அருண் நன்றாக செயல்பட்டார்.

    இதேபோல் கடைசி வினாடியில் அஜய் தாக்கூரின் ரெய்டு சிறப்பாக இருந்தது. ரெய்டு, டேக்கிள் ஆகிய இரண்டும் நன்றாக அமைந்தால் வெற்றி பெற்று விடலாம். குஜராத் அணி 15 ஆட்டத்தில் 9 வெற்றி, 3 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்று அந்த பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×