search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மையே சேவை: சாலையை சுத்தம் செய்து குப்பைகள் அள்ளிய சச்சின் டெண்டுல்கர்
    X

    தூய்மையே சேவை: சாலையை சுத்தம் செய்து குப்பைகள் அள்ளிய சச்சின் டெண்டுல்கர்

    தூய்மையே சேவை பிரச்சார திட்டத்தின் கீழ் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தெருக்களை இன்று அதிகாலை சச்சின் டெண்டுல்கர் கூட்டி, சுத்தம் செய்தார்.
    மும்பை:

    பிரதமர் மோடி பதவியேற்றதும் முதன் முறையாக தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் உள்ள பிரபலங்கள் இத்திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர், சமீபத்தில் மக்கள் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை கூட்டி, சுத்தம் செய்து வருகின்றர்.



    அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் மும்பை பந்த்ரா நகரில் உள்ள தெருக்களை இன்று அதிகாலை கூட்டி சுத்தம் செய்தார்.

    அவருடன் ஏராளமான பொதுமக்களும் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தனர். “இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க நான் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். அதனால், உங்களது நண்பர்களுடன் ஒன்று சேருங்கள், தெருவையோ வேறு எங்கேயோ சுத்தப்படுத்துங்கள்” என்று சச்சின் கூறியுள்ளார்.
    Next Story
    ×