search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்ம பூஷண் விருதுக்கு பேட்மிட்டண் வீராங்கணை பி.வி.சிந்து பெயர் பரிந்துரை
    X

    பத்ம பூஷண் விருதுக்கு பேட்மிட்டண் வீராங்கணை பி.வி.சிந்து பெயர் பரிந்துரை

    2017-ம் ஆண்டிற்கான பத்மபூஷண் விருதுக்கு பேட்மிட்டண் வீராங்கணை பி.வி.சிந்துவின் பெயரை விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

    இந்தாண்டிற்கான பத்மபூஷண் விருதுக்கு பேட்மிட்டண் வீராங்கணை பி.வி.சிந்துவின் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

    பி.வி.சிந்து சமீபத்தில் நடைபெற்ற கொரிய ஓபன் பேட்மிட்டண் தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கணை என்ற  பெருமை வகிக்கிறார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று அசத்தியிருந்தார்.

    இத்தகைய பெருமை கொண்ட பி.வி.சிந்து பத்மபூஷன் விருதிற்காக, கிரிக்கெர் வீரர் டோனியின் பெயருக்கு அடுத்தப்படியாக பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பி.வி.சிந்துவுக்கு ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.
    Next Story
    ×