search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாடுவேன்: ஹர்திக் பாண்டியா
    X

    அணிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாடுவேன்: ஹர்திக் பாண்டியா

    அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் களமிறங்கி விளையாடுவேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் களமிறங்கி விளையாடுவேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 124 ரன்னும், ஸ்மித் 63 ரன்னும், வார்னர் 42 ரன்னும் எடுத்தனர்.

    அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, ரகானே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டோன் அகர் பந்து வீச வந்தபோதெல்லாம் பாண்டியா பந்தை சிக்சருக்கு தூக்கினார்.
    ஹர்திக் பாண்டியா, 72 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹர்திக் பாண்டியா கூறுகையில், அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் களமிறங்கி விளையாட தயாராக உள்ளேன். இதை நான் சவாலாக நினைக்கிறேன். அணிக்கான எனது பங்களிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவே இதை நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆஸ்திரேலியாவுடனான தொடரில் 3-0 என முன்னிலை வகிப்பதால் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×