search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவுடன் பகிர்ந்திருக்க வேண்டும்: சேத்தன் ஷர்மா
    X

    விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவுடன் பகிர்ந்திருக்க வேண்டும்: சேத்தன் ஷர்மா

    கொல்கத்தா போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் உடன் அதை பகிர்ந்திருக்க வேண்டும் என் சேத்தன் ஷர்மா கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 252 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 92 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    கடினமான ஆடுகளத்தில் 92 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். இந்நிலையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுடன் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி பகிர்ந்திருக்க வேண்டும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவருமான சேத்தன் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.



    இதுகுறித்து சேத்தன் ஷர்மா கூறுகையில் ‘‘நாக்பூரில் 1987-ம் ஆண்டும் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினேன். கவாஸ்கர் சதம் அடித்தார். இந்த போட்டியில் கவாஸ்கர் உடன் இணைந்து நான் ஆட்ட நாயகன் விருதை பகிர்ந்து கொண்டேன். பேட்டிங் ஜாம்பவான் உடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொண்டதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.



    இங்கேயும் அதுபோன்று விராட் கோலி, குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து இருக்க வேண்டும். கோலி அடிக்கடி ரன்கள் குவிக்கிறார். ஆனால், ஹாட்ரிக் விக்கெட் எப்போதாவதுதான் வரும். இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் (கபில்தேவ்) இதற்கு முன் 1991-ம் ஆண்டுதான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். 26 ஆண்டுகளுக்கப் பிறகு தற்போதுதான் ஹாட்ரிக் விக்கெட் நிகழ்ந்து நடைபெற்றுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×