search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூர்: முதன்முதலாக சண்டைப்போட்டியில் பங்கேற்றவர் பரிதாப பலி
    X

    சிங்கப்பூர்: முதன்முதலாக சண்டைப்போட்டியில் பங்கேற்றவர் பரிதாப பலி

    சிங்கப்பூரில் நடைபெற்ற 'முவாய் தாய்' சண்டை போட்டியின்போது காயமடைந்த பிரதிப் சுப்ரமணியன் என்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

    சிங்கப்பூர்:

    முவாய் தாய் என்பது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தற்காப்புக்கலைகளுல் ஒன்றாகும். இந்த தற்காப்புக்கலையை பயன்படுத்தும் குத்துச்சண்டை போட்டிகள் தென்கிழக்கு நாடுகளில் நடத்தப்படுகின்றன. 

    சிங்கப்பூரில் முவாய் தாய் தற்காப்புக்கலையை பயன்படுத்தும் முதல் ஆசிய சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு பிரபலங்களுக்கு இடையேயான முவாய் தாய் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில், 2004ம் ஆண்டு தொடங்கிய முதல் சிங்கப்பூர் ஐடல் சீரிசின் முதல் போட்டியில் கலந்து கொண்ட யூடியுப்பில் பிரபலமான முவாய் தாய் வீரர் ஸ்டீவன் லிம் - சில்வெஸ்டர் சிம் ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது.

    ஆனால் இன்சூரன்ஸ் பிரச்சனைகளால் சில்வெஸ்டர் சிம் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு பதிலாக பிரதிப் சுப்ரமணியன் (31) என்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் இப்போட்டியில் களமிறங்கினார். இது அவருக்கு முதல் போட்டியாகும். இப்போட்டியில், காயமடைந்த சுப்ரமணியத்தால் போட்டியை தொடர முடியாமல் போனது. இதையடுத்து ஸ்டீவன் லிம் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார்.

    இப்போட்டிக்கு பின்னர் பிரதிப் சுப்ரமணியன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மாரடைப்பு காரணமாக நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணிக்கு அவர் மரணமடைந்தார். முதல் போட்டியிலேயே சுப்ரமணியம் மரணமடைந்த சம்பவம் அனைவர் மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×