search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டையர் பிரிவில் ஜோடி சேர்ந்து விளையாடிய நடால், பெடரர்
    X

    இரட்டையர் பிரிவில் ஜோடி சேர்ந்து விளையாடிய நடால், பெடரர்

    டென்னிஸ் ஜாம்பவான்களான நடால், பெடரர் முதன்முறையாக இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
    செக்குடியரசு நாட்டின் தலைநகரான பிராக்குவில் ஐரோப்பிய அணிக்கும், உலக லெவன் அணிக்கும் இடையிலான லவேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

    இதில் ஐரோப்பிய அணி இரட்டையர் பிரிவில் நடால், பெரடர் ஆகியோர் இணைந்து விளையாடினார்கள். இத்தனையாண்டு கால டென்னிஸில் எதிர் புதிருமாக விளையாடிய இருவர்கள் முதன்முறையாக சேர்ந்து விளையாடினார்கள். இனிமேல் இப்படி சேர்ந்து விளையாடுவதில்லை என்று அறிவித்தனர்.



    நடால் - பெடரர் ஜோடி சாம் குயுரே- ஜேக் சாக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய நடால் - பெடரர் ஜோடி, 2-வது செட்டை 1-6 என இழந்தது. வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் டை-பிரேக்கரில் 10/5 என வெற்றி பெற்றது.
    Next Story
    ×