search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்; 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்
    X

    3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்; 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்

    இந்தூரில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அந்த அணியின் தொடக்க வீரர் கார்ட்ரைட், விக்கெட் கீப்பர் வடே நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து விளையாடுவதை விட்டுவிட்டு விக்கெட்டை காப்பாற்றும் வகையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    இதனால் ஆஸ்திரேலியா முதல் 10 ஓவரில் 49 ரன்கள் எடுத்தது. 11 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 26 ரன்னுடனும், பிஞ்ச் 22 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
    Next Story
    ×