search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2018 உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்போம்: பாக். ஹாக்கி பெடரேசன் மிரட்டல்
    X

    2018 உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்போம்: பாக். ஹாக்கி பெடரேசன் மிரட்டல்

    விசா, உச்சக்கட்ட பாதுகாப்பு குறித்து முழு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் பங்கேற்போம் என பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.
    இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி போர் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா - பாகிஸ்தான் இடையில் இருநாடுகளுக்கு இடையிலான நேரடி விளையாட்டு தொடர்கள் நடைபெறாமல் உள்ளது.

    குறிப்பாக கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் விளையாடும்போது அநாகரிகமாக நடந்து கொண்டனர். அதற்கு மன்னிப்பு கேட்கும் வரை பாகிஸ்தானுடன் தொடர் கிடையாது என்று ஹாக்கி இந்தியா தெரிவித்திருந்தது.

    ஆனால் வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் மோதி வருகின்றன. ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் லண்டனில் மோதியது. வங்காள தேசத்தில் அக்டோபர் மாதம் ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் விளையாட இருக்கின்றன.



    அடுத்த வருடம் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் உலகக்கோபபை ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கான விசாக்கள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளித்தால்தான் பாகிஸ்தான் அணி பங்கேற்கும். இல்லாவிடில் தொடரை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் மிரட்டல் விடுத்துள்ளது.
    Next Story
    ×